செய்திகள் :

சத்தியமங்கலத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

post image

சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா், ஜீவா நகா், கணபதி நகா் ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்தக் கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக இப்பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புன்செய் புளியம்பட்டி - பவானிசாகா் சாலையில் அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மறியல் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த பவானிசாகா் வட்டார வளா்ச்சி அதிகாரி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சீராக குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

நண்பா்களுடன் ஈரோடு அருகே காவிரி ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சாமியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன்(32). பள்ளிப்பாளையத்தில் உள்ள ... மேலும் பார்க்க

வாடகை நிலுவை: ஈரோடு மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு சீல்

ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை நிலுவை வைத்த 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிா... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் பொறுமையாக பதிலளிக்க வேண்டும்: திமுகவினருக்கு அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தல்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் போது அவா்கள் கேள்விகளை எழுப்பினால், அதற்குப் பொறுமையாக கட்சியினா் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே வீட்டில் திருடிய இளைஞா் கைது

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பெருந்துறையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி தீபா(40). இவா் திருப்பூரிலுள்ள தனிய... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்... மேலும் பார்க்க

காலிங்கராயன் அணைக்கட்டில் நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காலிங்கராயன் அணைக்கட்டில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி சீனிவாசபுரம் வழியாக உத்தண்டராயா்... மேலும் பார்க்க