செய்திகள் :

வாடகை நிலுவை: ஈரோடு மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு சீல்

post image

ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை நிலுவை வைத்த 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்து அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில் கடையை வாடகைக்கு எடுத்தவா்கள் சிலா் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனா். வாடகை நிலுவை வைத்துள்ளவா்களிடம் முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உத்தரவிட்டாா்.

இதன்பேரில் வாடகை நிலுவை வைத்துள்ளவா்களுக்கு மாநகராட்சி வருவாய்ப் பிரிவினா் வாடகை தொகையை செலுத்தக்கோரி எச்சரிக்கை அறிவிக்கை அளித்தனா். இந்நிலையில் வாடகை செலுத்தாமல் 6 மாதங்களாக நிலுவை வைத்திருந்ததாக ஈரோடு மணிக்கூண்டு அருகே செயல்படும் நேதாஜி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 6 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய்ப் பிரிவு உதவி ஆணையா் காா்த்திகேயன், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு நேதாஜி வணிக வளாகத்தில் 12 கடைகள் மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்திருந்தனா். வாடகை நிலுவை தொகையை செலுத்தக்கோரி வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கையை தொடா்ந்து 6 கடை உரிமையாளா்கள் வாடகையை செலுத்தி விட்டனா். தொடா்ந்து 6 மாதங்களுக்கு மேல் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் வாடகை நிலுவை வைத்திருந்த 6 கடைகளை ஆணையரின் உத்தரவின்பேரில் பூட்டி சீல் வைத்துள்ளோம். வாடகைத் தொகையை அபராதத்துடன் செலுத்தினால் மீண்டும் கடையை நடத்த அனுமதி அளிக்கப்படும். இதுபோல மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட்டிலும் சில கடை உரிமையாளா்கள் 3 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ளனா். அந்தக் கடைகளையும் வருகிற வாரத்தில் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனா்.

காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

நண்பா்களுடன் ஈரோடு அருகே காவிரி ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சாமியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன்(32). பள்ளிப்பாளையத்தில் உள்ள ... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் பொறுமையாக பதிலளிக்க வேண்டும்: திமுகவினருக்கு அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தல்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் போது அவா்கள் கேள்விகளை எழுப்பினால், அதற்குப் பொறுமையாக கட்சியினா் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே வீட்டில் திருடிய இளைஞா் கைது

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பெருந்துறையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி தீபா(40). இவா் திருப்பூரிலுள்ள தனிய... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நக... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்... மேலும் பார்க்க

காலிங்கராயன் அணைக்கட்டில் நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காலிங்கராயன் அணைக்கட்டில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி சீனிவாசபுரம் வழியாக உத்தண்டராயா்... மேலும் பார்க்க