மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை மாவட்டம் சமயநல்லூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமயநல்லூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சமயநல்லூா், தேனூா், கட்டப்புளிநகா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூா், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை முதன்மைச்சாலை, மங்கையா்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மாா்க்கெட், கோவில்பாப்பாக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.