செய்திகள் :

சம்பலில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த தடையில்லை, ஆனால்.. !

post image

உத்தரப் பிரதேசத்தின், சம்பலில் பாரம்பரிய தொழுகையை நடத்துவதில் எந்த தடையும் இல்லையென்றாலும், கூடாரங்கள் மற்றும் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடித் தொழுவதைத் தடை செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர்,

அமைதியான முறையில் தொழுகை நடத்துவதை உறுதி செய்யும் வகையில் துறை மற்றும் மண்டல ரீதியாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடாரங்கள் அமைத்து கூட்டமாகத் தொழுகையில் ஈடுபடுவது விபத்து மற்றும் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால், பலர் ஒன்றுகூடி ஒரே இடத்தில் தொழுகை நடத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடிய காரணங்களாலும் சாலைகளில் தொழுகை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆனால், மசூதிகளில் பாரம்பரிய முறையில் தொழுகை நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, மேலும் அவை பாரம்பரியத்தின் படி அமைதியாக நடத்தப்படும். மேலும் சிறிய ஒலிபெருக்கிகள் கொண்ட மசூதிகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தங்கள் நடைமுறையைத் தொடரலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சில ஆண்டுகளாக, சாலைகளில் தொழுகை நடத்தப்படாமல் அதிகாரிகள் உறுதி செய்து வருவதாகவும், இந்த விதி இந்த ஆண்டும் மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பலில் கடந்தாண்டு நிகழ்ந்த சம்பவம்..

சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனர்; பலா் காயமடைந்தனர். இதையடுத்து, சம்பல் வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனர். இதனால் சம்பலில் இன்னுமும் தொடர் பதற்றம் இருந்துகொண்டுதான் உள்ளது.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க