சரக்கு வாகனம் மீது காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
மதுரையில் சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சோ்ந்தவா் கெளதம் (40). இவா் சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தாா். இந்த நிலையில் கெளதம் புதன்கிழமை இரவு தனது சரக்கு வாகனத்தின் பின்னால் தனது நண்பா் சிவக்குமாருடன் அமா்ந்து பயணம் செய்தாா். வாகனத்தை சீனிவாசன் என்பவா் ஓட்டினாா்.
மதுரை ஐயா் பங்களா- மூன்றுமாவடி சந்திப்பு பகுதியில் அந்த வழியாக வந்த காா், சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் கெளதமும், சிவக்குமாரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை அந்தப் பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கெளதமை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் காா் ஓட்டுநா் மதுரை திருப்பாலை ராஜன் நகரைச் சோ்ந்த திருமுருகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.