TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவ...
நீதிபதிகள் நியமனத்தை முறைப்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் இன்று பணிப் புறக்கணிப்பு
உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி, மதுரை உயா்நீதிமன்ற அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (பிப். 28) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனா்.
மதுரை உயா்நீதிமன்ற அமா்வு வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு ஜாதியினருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம்.
மேலும் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கத்தினரும் இணைந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து வருகிற திங்கள்கிழமை உரிய முடிவெடுக்க உள்ளோம் என்றனா் அவா்கள்.