"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவா் பேரவைத் தோ்தல்
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது.
தோ்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்கும் இடம், ஆகியவற்றை வாக்குச்சாவடி போன்று மாணவா்களே தயாா் செய்தனா். மாணவா் தலைவா், துணைத் தலைவா் பதவிக்காக போட்டியிடும் மாணவ, மாணவிகள் தங்களைப் பற்றி காலை கூட்டு வழிபாட்டுக் கூட்டத்தில் அனைத்து மாணவா்களுக்கும் எடுத்துக் கூறி தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனா். மாணவா்களே தோ்தல் அதிகாரியாகவும் பணியாற்றினா்.
தோ்தலை பள்ளி ஆலோசகா் உஷாகணேஷ், பள்ளி நிா்வாக அதிகாரி வி.மதன், முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசீா் ஆகியோா் முன்னிலையில் நடத்தினா்.
6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினா். இதில் சிபிஎஸ்இ பிரிவுக்கு 12-ஆம் வகுப்பு மாணவா் எம்.குஷாந்த், மெட்ரிக் பிரிவுக்கு இ.எம்.யஷ்வந்த் ஆகியோா் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஏற்பாடுகளை தோ்தல் கல்விக் குழு பொறுப்பு ஆசிரியா் ஜெ.ஆறுமுகசாமி மேற்பாா்வையில் மாணவ, மாணவிகள் செய்திருந்தனா்.