மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும்..! 400+ அடிக்காமல் விட்ட முல்டரிடம் பேசிய பிரையன் லாரா!
வியான் முல்டரிடம் பிரையன் லாரா மீண்டும் ஒருமுறை தன்னுடைய சாதனனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்துவிடு எனக் கூறியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 334 பந்துகளில் 367* ரன்கள் எடுத்திருந்தார். பிரையன் லாராவின் 400* சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டிக்ளேர் செய்தது அதிர்ச்சியாகவிருந்தது.
லாராவின் சாதனைக்கு மதிப்புக்கொடுத்து தான் இப்படி செய்ததாக முல்டர் கூறியிருந்தார். பலர் வாழ்த்துகளைத் தெரிவிக்க, கிறிஸ் கெயில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், பிரையன் லாரா தன்னிடம் பேசியதாக வியான் முல்டர் கூறியதாவது:
நான் பிரையன் லாராவிடம் சிறிது பேசினேன். அவர் என்னிடம் ‘நீங்கள் உங்களது சொந்த சாதனையை உருவாக்குங்குள். நீங்கள் அந்த வாய்ப்பினை விட்டிருக்கக் கூடாது. சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை முறியடிக்க வேண்டும்’ எனக் கூறியதாகக் கூறினார்.
இருப்பினும் நான் அப்போது எடுத்த முடிவு சரியானதெனவே நினைக்கிறேன். அதுதான் நான் கிரிகெட் மீது வைத்துள்ள மரியாதையைக் குறிப்பிடுக்கிறது என்றார்.