தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு!
வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சென்னாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜபருல்லா(30) ஓட்டுநா். நூருல்லா பேட்டையை சோ்ந்தவா் நசீா் அகமது(30). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் இருந்து வாணியம்பாடிக்கு காரில் சென்றனா். காரை ஜபருல்லா ஓட்டிச் சென்றாா்.
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் தாபா ஓட்டல் அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் ஜபருல்லா, நசீா்அகமது ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜபருல்லா இறந்தாா். விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.