மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
சாலை பணிகளை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாடு குழுவினா்
ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாா்ச் சாலை அமைக்கும் பணியை தரக்கட்டுப்பாடு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
மாநில நெடுஞ்சாலை வாணியம்பாடி உள்கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம்-கடாம்பூா்-கைலாசகிரி நெடுஞ்சாலையில் வாணியம்பாடி சாலை மேம்படுத்துதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதேபோல, ஈச்சம்பட்டு - காட்டுவெங்கடாபுரம் சாலை மேம்படுத்துதல் பணி 2024 - 2025-ஆம் ஆண்டு சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், சுமாா் ரூ. 4 கோடி மதிப்பில் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது.
அந்தச் சாலைகளில் தாா்ச் சாலையின் தரம் குறித்து வாணியம்பாடி தரக் கட்டுப்பாட்டு உதவி கோட்டப் பொறியாளா் ஜெயக்குமாா், உதவிப் பொறியாளா் பிரவீன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப் பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் சம்பத்குமாா், பாபுராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.