மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்ல திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் செல்வது வழக்கம்.
இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில் 124 சிறப்பு பஸ்கள் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.