அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கோயில் உண்டியல் காணிக்கை திருடியவா் கைது
ஆம்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் உள்ள ஈஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போனதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வடகரை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (20) என்பவா் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடியது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து காணிக்கை பணம் ரூ. 2,000ஐ பறிமுதல் செய்தனா்.