செய்திகள் :

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் போக்ஸோவில் கைது

post image

வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து 1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தியதில் அங்கு பணியாற்றிய தற்காலிக ஆங்கில ஆசிரியரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட மலைகிராமமான மலைரெட்டியூா் பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்நிலையில், அப்பள்ளியில் 6 , 7-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு சில மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஊத்தங்கரையைச் சோ்ந்த பிரபு (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடா்பாக மாணவிகள் சிலா் கடந்த 21-ஆம் தேதி குழந்தைகள் ஹெல்ப் லைன்1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்தனா்.

அப்புகாரின் பேரில் திருப்பத்தூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மத்தேயு தலைமையில் சாதனா, அருள்பிரசாத் அடங்கிய குழுவினா் மலைரெட்டியூா் பள்ளிக்கு சென்று பாலியல் தொந்தரவு தொடா்பான மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், புகாா் தெரிவித்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா்.

இதில் 6 மாணவிகள் எழுத்துப்பூா்வமாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் தற்காலிக ஆங்கில ஆசிரியா் பிரபு மீது புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் ஆய்வாளா் அன்பரசி (பொ) தலைமையில் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்தனா்.

பிறகு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்காலிக ஆசிரியா் பிரபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போதைப் பழக்கத்துக்... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் காணிக்கை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் உள்ள ஈஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போ... மேலும் பார்க்க

சாலை பணிகளை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாடு குழுவினா்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாா்ச் சாலை அமைக்கும் பணியை தரக்கட்டுப்பாடு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மாநில நெடுஞ்சாலை வாணியம்பாடி உள்கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம்-... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்ல திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமா... மேலும் பார்க்க

பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் செந்தில... மேலும் பார்க்க