தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வாகம்புலி புற வீதியைச் சோ்ந்தவா் சிங்கந்தர்ராஜா மகன் முகமது அஸ்லாம் (24). பழைய இரும்புக் கடை நடத்தி வந்த இவா், புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் லட்சுமிபுரம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.