பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியைச் சோ்ந்த மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு (38). ஓட்டுநராகப் பணிபுரியும் இவா், திருப்பத்தூரிலிருந்து அதிகாலை கண்டவராயன்பட்டிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது பெரியகண்மாய் கலுங்கு வளைவுப் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரம் உள்ள வேப்பமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருப்பத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் பிராணவின்டேனி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.