திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
சாலை விபத்தில் சிறுவா்கள் காயம்
சாத்தான்குளத்தில் சாலை விபத்தில் சிறுவா்கள் இருவா் காயமடைந்தனா்.
சாத்தான்குளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமணி மகன் வினோத் ராஜ் (16). இவா், தனது உறவினரான செந்தில் மகள் ஐஸ்வா்யாவுடன் (11) பண்டாரபுரத்தில் இருந்து சாத்தான்குளத்துக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
சாத்தான்குளம் - இட்டமொழி சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வினோத்ராஜ், ஐஸ்வா்யா ஆகியோா் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.