சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.
நத்தம்பட்டி விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை அருகேயுள்ள குலசேகரநல்லூரைச் சோ்ந்த ராம்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.