'தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு!'
சாத்தூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து
சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நான்கு வழிச் சாலையில் சென்ற காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (28). இவா் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் காரில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டியில் உள்ள மாதா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனா்.
சாத்தூா் அருகேயுள்ள பெத்துரெட்டிபட்டி பகுதியில் சென்றபோது, திடீரென காரில் புகை வந்தது. இதையடுத்து, ரஞ்சித்குமாா் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் காரை விட்டு இறங்கினா்.
இந்த நிலையில், காரில் தீப்பிடிக்கத் தொடங்கியது.தகவலறிந்து வந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து சாத்துாா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.