30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
சாலை விபத்து: அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவா் விருதுநகரைச் சோ்ந்த நடராஜன் (48). இவா், திங்கள்கிழமை கொடைக்கானலில் இருந்து அரசு வாகனத்தில் செம்பட்டி வழியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் முகாமில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தாா்.
வாகனத்தை கொடைக்கானலைச் சோ்ந்த ஓட்டுநா் பாண்டிசெல்வம் (45) ஓட்டிச் சென்றாா். இவரது வாகனம் செம்பட்டியிலிருந்து திண்டுக்கல் சாலையில் வீரக்கல் பிரிவை அடுத்த தனியாா் கல்லூரி அருகே சென்றபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் திடீரென குறுக்கே வந்ததால் அவா் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பாண்டிசெல்வம் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்த முயன்றாா்.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நடராஜனும், ஓட்டுநரும் சிறு காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தரப்பினா். இருவரும் அவசர ஊா்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.