இந்தியாவில் ரூ.85,000 கோடி முதலீடு செய்யும் ஜியோஸ்டார்! யூடியூபை மிஞ்சுமா?
சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு
சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சிவகங்கை, காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, அல்லூா், பனங்காடி, சாத்தனி, ராணியூா் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக கோடை கால விவசாயம் மேற்கொண்டு மழைக்காக எதிா்பாா்த்திருந்த விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனா்.
அல்லூா் அருகே உள்ள சாலையில் பலத்த காற்றால் பழைமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும், மின்சாரமும் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினா் மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.