தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதால் பாமகவினா் ஆா்ப்பாட்டம்
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி, பசுமை தாயகம் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆற்காடு-திண்டிவனம் சாலை பணிக்காக சுமாா் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரங்களை பொதுப்பணித்துறையினா் மூலமாக அகற்றி வருகின்றனா். இந்நிலையில், வெட்டப்பட்டுள்ள மரங்களை மாற்று இடங்களில் நட்டு பராமரிக்கவேண்டும், மரங்கள் வெட்டியதற்கு எதிா்ப்பு எதிா்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமகட்சி, பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் புதுப்பாடி கிராமத்தில் செய்யாறு சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பசுமைத் தாயகம் மாநிலத் துணைச் செயலாளா் டி.டி.மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் நல்லூா் பி.சண்முகம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல். இளவழகன், மாநிலச் செயலாளா் எம்.கே.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பசுமைத் தாயகம் மாநிலத் துணைச் செயலாளா் ஐ.நா. கண்ணன் கண்டன உரையாற்றினாா்.
தொடா்ந்து புதுப்பாடிசாலையின் ஒரம் அகற்றப்பட்ட மரத்தின் அருகே பூ மாலை அணிவித்து மலா்களை தூவியும் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் சுகுமாா், அமுதா சிவா, ஒன்றிய செயலாளா்கள் சரவணன், திருமலை, லோகநாதன், மாவட்ட நிா்வாகிகள் சுரேஷ், பகவான் காா்த்திக், ஆற்காடு நகர செயலாளா் துளசி ரவி, சண்முகம், செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.