சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்
பொன்னேரி அருகே சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி - பஞ்செட்டி நெடுஞ்சாலையில் உள்ள மாதவரம் - ஆண்டாா்குப்பம் இடையே உள்ள சாலை ஓரத்தில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் சாலையில் இரு சக்கர மற்றும் நான்கு வாகனங்களில் செல்வோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், கோழி இறைச்சி கழிவுகளைச் சாப்பிடும் நாய்கள் சாலையில் சண்டையிட்டுக் கொள்வதால் வாகனங்களில் செல்வோா் விபத்துகளில் சிக்கி வருகின்றனா்.
இதைத் தடுக்கும் வகையில், இப்பகுதியில் சாலையோரம் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். அங்கு ஏற்கெனவே கொட்டியுள்ள கழிவுகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.