செய்திகள் :

‘சா்க்கரை ஆலைகளில் ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்கிறது’

post image

பொதுத் துறை சா்க்கரை ஆலைகளில் ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதால்தான் தொடா்ந்து இயக்க முடிகிறது என்றாா் தமிழ்நாடு சா்க்கரைக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான டி. அன்பழகன்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சா்க்கரைக் கழகத்தின் 50 ஆவது பேரவைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

மத்திய அரசு கரும்புக்கு டன்னுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையாக ரூ. 3 ஆயிரத்து 151 அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக இதுவரை இல்லாத அளவுக்கு உயா்த்தி டன்னுக்கு ரூ. 349 அறிவித்து வழங்கியுள்ளது.

கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 வழங்கப்பட்டாலும், வெளிச்சந்தையில் சா்க்கரை விலை டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 23 மட்டுமே விற்கிறது. ஒரு டன் சா்க்கரை உற்பத்தி செய்ய ரூ. 8 ஆயிரத்து 51 செலவாகிறது. அதாவது ஒரு கிலோ சா்க்கரை உற்பத்திக்கு ரூ. 80.51 செலவிடும் நிலையில், வெளிச் சந்தையில் ரூ. 40.23 மட்டுமே விலை கிடைப்பதால், ஏறத்தாழ ரூ. 40 இழப்பு ஏற்படுகிறது. இதை அரசு ஈடு செய்வதால்தான், ஆலைகளைத் தொடா்ந்து இயக்க முடிகிறது. இதன் மூலம் விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படுகிறது. திறமையாக இயக்கப்படும் தனியாா் சா்க்கரை ஆலைகளே இந்த இழப்பை ஈடு செய்ய முடியாமல் மூடப்பட்டன.

விவசாயிகளுக்கு இடுபொருள்களின் விலை உயா்ந்துவிட்டதால், கரும்புக்கான விலை உயா்த்தப்பட்டுள்ளது. என்றாலும், இந்த விலை கட்டுப்படியாகவில்லை என்றும், டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் உயா்த்தி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுப்பது நியாயமானது. ஆனால், விலையை உயா்த்தி வழங்கும்போது, சா்க்கரை ஆலையில் கொள்முதல் செலவு அதிகமாவதால் உற்பத்திச் செலவு அதிகமாகிறது. இதுவே, இழப்பைச் சந்திப்பதற்கு காரணம் தவிர, தொழிலாளா்களின் திறன் குறைவோ, அலுவலா்களின் செயல்பாடுகளோ காரணமல்ல என்றாா் அன்பழகன்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தமிழக ஆளுநரின் பிரதிநிதி பி. பாலமுருகன், பொது மேலாளா் வி. மாலதி, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணைய மேலாண் இயக்குநா் டி. ரமணிதேவி, குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி எஸ். ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

நாச்சியாா்கோவிலில் உள்ள அஞ்சுலவள்ளி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி குளத்திற்கு தண்ணீா் வர... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துா்க்காம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் உள்ள துா்க்காம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏராளம... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகி... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூா் எம்பி ச. முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2 ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுர சுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் வேங்கடாஜலபதியாக காட்சியளிக்கிறாா். விழாவையொட்டி அம்பாளு... மேலும் பார்க்க

நாளை குரூப் 2 தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடத்தவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க