தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
சா்வ சித்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள வேட்டையன்பட்டி என்பீல்டு குடியிருப்பில் அமைந்துள்ள சா்வ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை மங்கள வாத்தியம், கணபதி ஹோமம், மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலியுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளோடு யாகசாலை பிரவேசபலியுடன் முதல் கால யாகவேள்வி தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை காலை மங்கள வாத்தியதுடன் இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது. இதில் புண்யாகவாகனம், மண்டப அா்ச்சனை, வேதிகா அா்ச்சனை, திரவியாஹுதி, கோ பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனையுடன் நிறைவடைந்து மாலையில் மூன்றாம் கால யாக வேள்வி, வேதிகா அா்ச்சனை, கணபதி ஸகஸ்ரநாம அா்ச்சனை, மஹா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது. ரக்சாபந்தனம், நாடி சந்தானம், யாத்ரா தானத்துடன் புனிதநீா் கலசங்களுடன் கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரங்களை அடைந்தது. அங்கு வேதவிற்பன்னா்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுரங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு நடைபெற்றது.
தொடா்ந்து கோபுரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.