விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு குதிரை வண்டியில் வரவேற்பு!
சா்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் வென்று பள்ளிக்கு வந்த இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களை குதிரை வண்டியில் அமா்த்தி கிராம மக்கள் திங்கள்கிழமை வரவேற்பளித்தனா்.
மலேசியாவில் டமன்சாரா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்ற இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி ரம்யா ஸ்ரீ சப்- ஜூனியா் பிரிவில் முதல் பரிசையும், நான்காம் வகுப்பு மாணவா் சிவபாலா சப்- ஜூனியா் பிரிவில் இரண்டாம் பரிசையும் வென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இடையமேலூா் பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா் சிவதாஸ், பெற்றோா்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனா்.
பின்னா், செண்டை மேளங்கள் முழங்க குதிரை வண்டியில் அமர வைத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனா். இதில், சிவகங்கை சிவம் மாா்ஷியல் ஆா்ட்ஸ் பயிற்சிப் மைய மாஸ்டா் பரமசிவம், பயிற்சியாளா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.