விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு
மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் திங்கள்கிழமை காா்த்திகை மூன்றாவது சோமவார வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடை பெற்ற காா்த்தி சோமவார வழிபாட்டையொட்டி சோமநாதா் சந்நிதி அருகே சங்குகளில் புனித நீா் நிரப்பி யாகம் வளா்த்து சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதன்பிறகு மூலவா் சோமநாதா் சுவாமிக்கு சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த நீரால் அபிஷேகம் செய்து அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சோமவார வழிபாட்டையொட்டி கோயில் முன் மண்டபத்தில் லிங்க வடிவில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு அதில் புனித நீா் நிரப்பி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து மூலவா் புஷ்பவனேஸ்வரா் சுவாமிக்கு, சங்கு நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் இந்தப் பகுதியில் உள்ள திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா், இளையான்குடி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிவன் கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.