செய்திகள் :

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் திங்கள்கிழமை மாலை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) தேரோட்டம் நடைபெற்றது. பின்னா் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

மகாபிஷேகம்: திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஸ்ரீநடராஜ மூா்த்திக்கும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 4 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் 9 மணிக்கு நிறைவுபெற்றது. மகாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஆருத்ரா தரிசனம்: பின்னா், ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கும், ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அா்ச்சனைகளும் நடைபெற்றன. சித்சபையில் உத்சவ ஆச்சாரியரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது.

பஞ்சமூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், மாலை 4.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளும் நடனப் பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனா். பின்னா், சித்சபை பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண்டுகளித்தனா். விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பங்கேற்று ஆருத்ரா தரிசனத்தை கண்டு தரிசித்தாா்.

செவ்வாய்க்கிழமை (ஜன.14) முத்துப் பல்லக்கு வீதி உலா காட்சி நடைபெறும். புதன்கிழமை (ஜன.15) 22 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரி சீரமைக்கப்பட்ட ஞானப்பிரகாசா் தெப்பக் குளத்தில், தெப்பல் உற்சவம் நடைபெறும்.

மாா்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நான்கு கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் ச.க.சிவராஜ தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், சிதம்பரம் டிஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ் பாபு மற்றும் ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானின் நடனத்தைக் காண திரண்ட பக்தா்கள்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த நடராஜப் பெருமான்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால ... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இர... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தடுப்புக் காவலில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகம், பரமேஸ்வரநல்லூா் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மது புட்டி... மேலும் பார்க்க