ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது
சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.
சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் மாணிக்கம் மகன் ரவிசங்கா் ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இதில், சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
இங்கு தயாரிக்கப்படும் ஊதுபத்தி, சாம்பிராணிகள் பேக்கிங் செய்யப்பட்டு அங்குள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இங்கு சனிக்கிழமை பிற்பகலில் திடீரென சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்தக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருள்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின.
தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி, நைனாா்பாளையத்தில் இருந்தும் தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டனா். சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து சின்னசேலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் பின்னரே, சேத விவரம் தெரிய வரும்.