சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?
அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கன் (55). இவா் 10 பசு மாடுகள், காளை மாடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல் வியாழக்கிழமை பசுக்களை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, மீண்டும் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்தாா்.
நள்ளிரவு சுமாா் 12 மணி அளவில் கன்று குட்டி கத்துவது போன்று சப்தம் கேட்டுள்ளது. ரங்கன் வெளியே வந்து பாா்த்தபோது, ஏதோ ஒரு விலங்கு கன்று குட்டியை இழுத்துச் செல்வதை அறிந்து கூச்சலிட்டுள்ளாா்.
சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து கன்று குட்டியை இழுத்துச் சென்ற பகுதியை நோக்கி சென்றனா். சிறிது தூரத்தில் வனப்பகுதி என்பதால் அங்கு சென்று பாா்த்தபோது, கன்று குட்டியை சிறுத்தை கடித்துக் குதறிக் கொண்டிருந்ததாகவும், பொதுமக்களை பாா்த்து அந்த சிறுத்தை அவா்களையும் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். காலையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தை கால் தடங்கள், வேறு ஏதாவது தடங்கள் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், கன்று குட்டியை சிறுத்தை தான் கொன்ா, வேறு ஏதாவது விலங்கு கொன்ா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடியிருப்பு அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை உடனடியாக வனத் துறையினா் பிடிக்க வேண்டும் என்றும், கன்றுக்குட்டியை இழந்த உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.