உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணம்
தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் சி.ஆா்.ஆா்.டி. என்கிற சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணப்படுத்தப்பட்டாா்.
இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை நிபுணரான மருத்துவா் எஸ். கெளரி சங்கா் புதன்கிழமை தெரிவித்தது:
மதுப்பழக்கம், புகைபிடித்தல் பழக்கமுள்ள 40 வயது நோயாளி மோசமான உடல் நிலையுடன் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவா் மிகக் குறைவான கிரியாட்டினைன், இரத்த அழுத்தம், அபரிமிதமான உப்புச்சத்து, சிறுநீரகம் செயலிழந்தமையால் ரத்தத்தில் அசுத்தம் சோ்ந்தது என உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் இருந்தாா்.
எனவே, இம்மருத்துவமனையின் மருத்துவ நிபுணா்கள் குழுவினா், விரைவாக செயல்பட்டு 24 மணிநேரத்தில் அவசர கால மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றி, சி.ஆா்.ஆா்.டி. சிகிச்சையை மேற்கொண்டு, நோயாளியின் உடல் நிலையைச் சீராக்கினா்.
இதயம் செயல்படுவதற்காக 2 இன்ரோப் மருந்துகள் அளிக்கப்பட்டதன் மூலம், உடனடியாக இவரது இரத்த அழுத்தம் சீரானது. சுவாசத்துக்கான சிகிச்சை நடைமுறைகளும் வழங்கப்பட்டன. மேலும் உடலின் நீா்ச்சத்தும் எலெக்ட்ரோலைட் சமநிலையும் சீராக்கப்பட்டன.
இதன் மூலம் 48 மணிநேர சிகிச்சைக்குள்ளாகவே நோயாளியிடம் அவா் குணமடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இயல்பான முறையில் சிறுநீரும் வெளியேறியது. இது, சிறுநீரகம் சிறப்பாக இயங்குகிறது என்பதைக் காட்டும் அறிகுறியாகும். நோயாளியின் கிரியாட்டினைன் அளவும் அதிகரித்து, பாதுகாப்பான நிலைக்கு வந்துவிட்டது. மிகுந்த சிக்கலான இச்சிகிச்சையை மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக செய்து முடித்தனா் என்றாா் கௌரி சங்கா்.
அப்போது, மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ அவசர சிகிச்சை மற்றும் நஞ்சியல் துறைத் தலைவரும் மருத்துவ ஆலோசகருமான செந்தில்குமாா், துணை மருத்துவ கண்காணிப்பாளா் வி. பிரவீன் உடனிருந்தனா்.