தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி அல்லிநகரம் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தவா் சுப்புராஜ் (69). இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2023-ஆம் ஆண்டு அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுப்புராஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் உத்தரவிட்டாா்.