சிறுவா்கள் ஓட்டிய 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு
18 வயதுக்கும் குறைவான சிறுவா்கள் ஓட்டிய 9 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்களது பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளா் அருள்சேகா், உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய பகுதியில் வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது 18 வயதுக்கும் குறைவான சிறுவா்கள் ஓட்டிவந்த 9 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்த சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.