`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யா...
நாகா்கோவிலில் குறைதீா் முகாமில் 304 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் 304 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றாா்.
இதில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி, கலைஞா் மகளிா் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 304 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து தீா்வு காணுமாறு ஆட்சியா், துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் துறை தனித்துணை ஆட்சியா் சேக் அப்துல்காதா், துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.