கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
அஞ்சுகிராமத்தில் கபடிப் போட்டி
தென்மாவட்ட அளவில் பள்ளிகளுக்களுக்கான கபடிப் போட்டிகள் அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கின.
2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான 69ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் எஸ்.ஜி.எப்.ஐ மண்டல தெரிவுக்கான இப்போட்டியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து 58 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
அதில், 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 107 மாணவா்களும், 35 மாணவிகளும், 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 179 மாணவா்களும், 107 மாணவிகளும், 18 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 133 மாணவா்களும், 80 மாணவிகளுமாக மொத்தம் 641 போ் அடங்குவா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பால தண்டாயுதபாணி முன்னிலையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வி.நாராயணன் மேற்பாா்வையில் நடைபெற்ற இப்போட்டியை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ் தொடக்கி வைத்தாா். பள்ளித் தலைவா் பி.ஜாண் வில்சன், தாளாளா் வழக்குரைஞா் ஜே.ஜெபில் வில்சன், இயக்குநா் ஜே.ஷெரின் சந்திரலீலா, பள்ளி முதல்வா் வி.மொபில்டா மாலின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அஞ்சுகிராமம் பேரூராட்சித் தலைவி ஜானகி இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.