சிவகங்கை நான்கு வழிச் சாலை: தரக்கட்டுபாடு அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் முதல் புறவழிச் சாலை வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
சிவகங்கை நீதிமன்ற வாசல் முதல் புறவழிச் சாலை வரை 2.32 கி.மீ. தொலைவில் இரு வழிச்சாலையானது, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி முதல்வரின் சாலை விரிவாக்கத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
இந்தச் சாலைப் பணிகளின் தரம் குறித்து சென்னை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.
உடன் மதுரை கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலை தரக்கட்டுபாடு) பிரசன்ன வெங்கடேசன், சிவகங்கை கோட்டப் பொறியாளா் நெடுஞ்சாலை (கட்டுமானம்) சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ். சையதுஇப்ராஹிம், உதவிக் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) அரிமுகுந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.