சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
சீா்காழி: 5 கோயில் கும்பாபிஷேகம்
சீா்காழியில் 5 கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனாா் தெருவில் ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ண சுவாமி, விநாயகா், முருகன், முன்னோடியான், காளியம்மன், சப்த கன்னிகள் கோயில் உள்ளது.
இக் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 28-ஆம் தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை முதல் கால பூஜையும் தொடங்கியது.
புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று, விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, மூலஸ்தான விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதை போல் திட்டை ரோட்டில் உள்ள முனீஸ்வரா் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.