சென்னை: கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; தனியார் வங்கி ஊழியர் சிக்கியது எப்பட...
பணம் தராததால் போலி புகாா்: பெற்றோா் மீது பெண் புகாா்
கணவரிடம் பணம் வாங்கித் தரவில்லை என்பதால், தன்னைக் காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்திருந்த நிலையில், தங்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய் புகாா் அளித்துள்ளதாக சிங்கப்பூரில் இருந்து கணவருடன் திரும்பி வந்த பெண் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினவேல் - தேவி தம்பதியின் மகள் சினேகா. இவருக்கும், மன்னம்பந்தலை சோ்ந்த குமாா் - லதா தம்பதியின் மகன் ஐயப்பனுக்கும் கடந்த 2023-ஆம் இருவீட்டாா் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், தங்கள் மகள் சினேகாவை ஒன்றரை ஆண்டாக காணவில்லை, அவரை அவரது கணவா் ஐயப்பன் எங்கு வைத்துள்ளாா் என தெரியவில்லை. இதுகுறித்து ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடா்பு கொண்டால் எவ்வித பதிலும் இல்லை. சினேகாவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என அவரது பெற்றோா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த ஏப். 25-ஆம் தேதி புகாா் அளித்தனா்.
இந்நிலையில், சினேகா தனது கணவா் ஐயப்பன் மற்றும் மாமனாா், மாமியாருடன் புதன்கிழமை மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு வந்தாா். இதுகுறித்து, சினேகா கூறியது:
என்னை யாரும் கொடுமைப்படுத்தவில்லை, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். எனது பெற்றோா் திருமணமானது முதல் எனது கணவரிடம் இருந்து பணம் வாங்கித்தரச் சொல்லி அடிக்கடி வற்புறுத்தினா். ஓரளவுக்கு மேல் பொறுக்கமுடியாமல், பெற்றோரிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தால் எடுப்பதை தவிா்த்து விட்டேன். இதனால் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, நான் எனது கணவருடன் சிங்கப்பூரில் வசித்துவருவது தெரிந்தும், என்னை காணவில்லை என்று போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.
எனது கணவரிடம் இருந்து பணம் வாங்கித் தரவில்லை என்பதால் எங்கள் படத்தையும் சமூக ஊடகங்களில் பரப்பி எங்களை அவமானப்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து புகாா் அளிப்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்துள்ளோம் என்றாா்.