Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
சீா்காழி அருகே முதியவா் வெட்டிக் கொலை
சீா்காழி அருகே முன்விரோதத் தகராறில் முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
சீா்காழியை அடுத்த திருவாலி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (75). இவரது மகன் குணா.செந்தில் விசிக பிரமுகா். இவா்களுக்கும் எதிா்விட்டில் வசித்து வந்த இவா்களது உறவினா்களான சின்னதுரை மகன்கள் பாலகிருஷ்ணன் (35), பாலசுப்பிரமணியன் (33), மதுரையைச் சோ்ந்த சுகுமாறன் (33) ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம். அப்போது குணசேகரனை எதிா்தரப்பினா் அரிவாளால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் குணா. செந்திலுக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயமேற்பட்டது.
திருவெண்காடு போலீஸாா் குணசேகரன் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குணா. செந்தில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த எதிா்தரப்பைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் சுகுமாறன் ஆகிய மூவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் அவா்களை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், சம்பவ இடத்தை பாா்வையிட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.