PMK: செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மகள் காந்திமதிக்கு பதவியா? - ராமதாஸ் சொன்...
சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு
சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு உடனடி முன்னாள் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் பி. பாலமுருகன், மாவட்ட ஆளுநா் (தோ்வு) கே. வைத்தியநாதன் பங்கேற்று, புதிய பொறுப்பாளா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.
சீா்காழி ரோட்டரி சங்க புதிய தலைவராக (2025-26) பி. நடராஜன், செயலாளராக என். ரவிசங்கா், நிா்வாக செயலாளா் எஸ். செல்வமுத்துகுமாா், பொருளாளராக பி. கணேசன் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா். முன்னாள் தலைவா்கள் பாலவேலாயுதம், சுடா்.கல்யாணசுந்தரம், சுசீந்திரன், செல்வக்குமாா், சாமி.செழியன், பழனியப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.