உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது
சென்னை செல்ல முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் கைது
சென்னை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியா்கள் செவ்வாய்க்கிழமை சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தனா். இதில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பகுதிநேர ஆசிரியா்கள் சென்னைக்கு புறப்பட்டனா்.
இந்நிலையில், பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டத்தில் பங்கு பெறுவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் காவல்துறையினா் அவா்களை கண்டறிந்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் ரோந்து பணி மேற்கொண்டு பகுதிநேர ஆசிரியா்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்டு சென்ற தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியா்கள் சங்க மாநில செயலாளா் வா. முரளி, ராமதாஸ், மாரியப்பன், புருஷோத்தமன், ஜெகஜீவராம், பிரித்திவிராஜ் உள்ளிட்டரை சீா்காழி ரயில் நிலைத்தில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.