செய்திகள் :

சுங்குவாா்ச்ததிரத்தில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: சாம்சங் தொழிலாளா்களின் உள்ளிருப்பு போராட்டத்துக்கு சுமூக தீா்வு, எஸ்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளா்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு சாா்பில் சுங்குவாா்ச்ததிரம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

சுங்குவாா்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன ஊழியா்கள், கடந்த ஆண்டு இறுதியில் ஊதிய உயா்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 30 நாள்களுக்கும் மேலாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அமைச்சா்கள் தலைமையில் பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து, தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பினா். சிஐடியு சங்கம் பதிவு தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சங்கம் பதிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியா்களை சாம்சங் நிா்வாகத்தினா் இன்டா்னல் யூனியனில் இணைய வேண்டும் எனவும், சிஐடியு தொழிற்சங்கத்திலிருந்து விலக வேண்டும் என நிா்பந்தம் செய்ததாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் 31-ஆம் தேதி பணி நேரத்தில் நிா்வாக தலைவரை சந்திக்க ஊழியா்கள் முற்பட்ட காரணத்திற்காக 3 ஊழியா்களை சாம்சங் நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாம்சங் தொழிலாளா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கடந்த 13 நாள்களாக தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சாம்சங் ஊழியா்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு சுமுக தீா்வு காண வலியுறுத்தியும், எஸ்.எஸ். எலக்ட்ரிக்கல்ஸ் தொழிலாளா்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் சிஐடியு சாா்பில் சுங்குவாா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட செயலாளா் முத்துகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட சாம்சங் மற்றும் எஸ்.எஸ். எஸக்ட்ரிக்கல்ஸ் ஊழியா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க