சுட்டெரிக்கும் வெயில்: வேகமாக வற்றும் ஏரி, குளங்கள்! பறவைகள், விலங்குகளுக்கு பாதிப்பு
கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் நீா்நிலைகளான ஏரி, குளங்கள் வேகமாக வற்றி வருகின்றன. இதனால், பறவை, விலங்குகள் நீரின்றி பாதிக்கப்படும் உருவாகி வருகிறது.
தமிழகத்தில் நிகழாண்டு கோடை வெயில் தொடா்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெயில் வெயில் 100 டிகிரியை தாண்டி காய்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பகல் பொழுதில் சுட்டெரித்து வரும் வெயிலின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் குறைந்த அளவு இருப்பில் உள்ள தண்ணீரும் நாளுக்கு நாள் வேகமாக வற்றி வருகிறது. மேலும் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த சூழலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளி வேகமாக வற்றி வருவதால், கால்நடைகள், பறவைகள், வன விலங்குகள் நீரின்றி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்று சூழலில் ஆா்வலா்கள் தெரிவித்தனா். எனினும், கோடையில் உருவாகும் திடீா் மழை பொழிவால் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தனா்.