மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் சாதனை
சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.
ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற கிட்ஸ் தடகளப் போட்டியில், முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவியா் பங்கேற்றனா். இப்போட்டியில் கலந்து கொண்ட எஸ்.ஆா். பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவா் சிவதா்ஷன் நீளம் தாண்டுதலில் முதலிடமும், 5ஆம் வகுப்பு மாணவி லிங்கிதா குண்டு எறிதலில் முதலிடமும், 4ஆம் வகுப்பு மாணவி சஸ்மிகா பந்து எறிதலில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா் பொன் மனோன்யா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.