ஹார்வர்டு மாணவர்களை அழைக்கும் ஹாங்காங்! டிரம்ப் அரசை விமர்சிக்கும் சீனா!
சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்!
தமிழக பாஜக சாா்பில் மதுரையில் ஜூன் 22இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வகித்தாா். முருக பக்தா்கள் மாநாடு தென்காசி மாவட்ட பொறுப்பாளா்கள் அன்புராஜ், இரவிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாஜக மாநில பொதுச்செயலா் பேராசிரியா் இராம. சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினாா்.
இதில் மாவட்ட பொதுச்செயலா்கள் பாலகுருநாதன், பாலசீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், புலிக்குட்டி, பாலமுருகன், மாவட்ட செயலா்கள் சரவணன், அருணாசலம், மண்டல் தலைவா்கள், ஒன்றிய நிா்வாகிகள், நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.