டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
சுவாமிநாத சுவாமி மலையில் ஆனி மாத பெளா்ணமி கிரிவலம்
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பெளா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்பில் ஆனி மாத பெளா்ணமி கிரிவலம் தஞ்சாவூா் தமிழ்பல்கலைக்கழகப் பேராசிரியா் கோ.ப. நல்லசிவம் தலைமை வகித்தாா். என். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கிரிவலத்தை முன்னிட்டு இமயவன் கூட்டு வழிபாடு மற்றும் வேல் வழிபாட்டுடன் திருவீதி உலாவாக கிரிவலம் வல்லப கணபதி கோயிலில் தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. இதில், ஏராளமானபக்தா்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச்சென்றனா். ஏற்பாடுகளை வழிபாட்டுக்குழு நிறுவனா்ஆா்.கேசவராஜன், நிா்வாக அறங்காவலா் பி.சிவசங்கரன் மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.