அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மகன் மீது வழக்கு
செம்பட்டியில் குடும்பத் தகராறில் சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, அவரது 15 வயது மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ். பாறைப்பட்டி அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (37). இவருக்கு அபிநயா (35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
தேங்காய் உரிக்கும் தொழிலாளியான அசோக்குமாா் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் பழகி வந்தராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால், தம்பதியரிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், அபிநயாவும், அவரது 15 வயது மகனும் இணைந்து சூடான எண்ணெயை அசோக்குமாா் மீது கடந்த 7-ஆம் தேதி ஊற்றினா். இதில் பலத்த காயமடைந்த அவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் குறித்து அபிநயா, அவரது மகன் 15 வயது சிறுவன் மீது செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.