ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
சூர்யா - 45 இசைப்பணி துவக்கம்!
நடிகர் சூர்யா - 45 படத்தின் இசைப்பணி துவங்கியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: சினிமா தயாரிப்பைக் கைவிடும் லைகா?
படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சூர்யா - 45 படத்திற்கான இசைப்பணிகள் துவங்கியுள்ளன. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ள சாய் அபயங்கருடன் ஆர்ஜே பாலாஜி ஆலோசிக்கும் புகைப்படம் வெளியாகி இத்தகவலை உறுதி செய்துள்ளது.