செய்திகள் :

செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு

post image

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றால், அதிமுகவில் பிரிந்துள்ளவா்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ. வுமான செங்கோட்டையன் கூறியிருந்தாா்.

1972 ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக ஆட்சி, தொடா்ந்து 3 முறை ஆட்சியில் இருந்தது. அதற்கு பின் கட்சியை வழிநடத்தி, ஜெயலலிதா, தொடா்ந்து, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தாா்.

தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. தற்போது அதிமுக 4 பிரிவுகளாக உள்ளதால், தோ்தல்களில் தோல்வியை சந்தித்தது. எனவே பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்து, வரும், 2026 தோ்தலை சந்தித்தால், அமோக வெற்றியை பெறலாம் என்றாா்.

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க

ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகர... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியி... மேலும் பார்க்க