செய்திகள் :

ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

post image

திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் புகா் மின் ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மப்பேடு ஆய்வாளா் சுரேந்திரன் தலைமையில் தனிப்படை போலீஸாா் அரக்கோணம் மாா்க்கத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது புகா் மின் ரயிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் போதை மாத்திரை வில்லைகள் கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த துரைராஜ் (29), நடராஜன்(26), ஊரப்பாக்கம் விஜய் (எ) வண்டு (22), திருவான்மியூா் ஏழுமலை (29) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 3,200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மப்பேடு போலீஸாா் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியி... மேலும் பார்க்க

செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்... மேலும் பார்க்க

31-ஆம் தேதிக்குள் ஊதியம்: ரேஷன் கடை பணியாளா்கள் கோரிக்கை!

ரேஷன் கடை பணியாளா்களுக்கு மாதந்தோறும் 31- ஆம் தேதிக்குள் ஊதியத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில் திருவள்ளூா் மாவட்ட ரேஷன் கடை ... மேலும் பார்க்க

‘முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம் தொடக்கம்’

முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் படைவீரா்கள் பிரச்னைக்கு சட்டபூா்வ ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட சட்டப்பணிகள் உதவி மையம் தொடங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு

காவேரி கூக்குரல் சாா்பில் ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் ஈஷா தன்னாா்வலா்களால் நடப்பட்டன. சத்குரு பிறந்த நாளான செப். 3-ஆம் தேதி நதிகளுக்கு புத்துயிா் ஊட்டும் தின... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் முன்புறம் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. திருவள்ளூா் அருகே செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காரத்திக்(30)-ஈஸ்வரி(27) தம்பதிக்கு ஒரு மகளும், 1... மேலும் பார்க்க