மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
செங்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனை
தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு மாவட்டஅதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகளிடம் புதிய நிா்வாகிகள் சோ்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினாா்.
அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், பொருளாளா் சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் அயராது பாடுபடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் கந்தவேல், துணைத் தலைவா் முருகையா, மாவட்ட இணைச் செயலா்கள் ஆறுமுகம், பெரியதுரை, துணைச் செயலா்கள் சமுத்திர பாண்டியன், ரவி, கிருஷ்ணன், பரமசிவன் முருகையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் முருகராஜ் நன்றி கூறினாா்.